Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…பிள்ளைகளால் பெருமை உண்டாகும்…பொறுமை அவசியம்…!

தனுசு ராசி அன்பர்களே …!     எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். மற்றவர்கள் குறை கூறாத அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும். இன்று நினைத்துக் கொள்வீர்கள் துன்பம் வந்தாலும் துவண்டு விடாமல் சிரிக்க கற்றுக் கொள்வீர்கள். இன்று உங்களுக்கு கொஞ்சம் பொறுமையாக தான் செயல்பட வேண்டும். குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை இருக்கும். கணவன் மனைவி இருவரும் பேசும் போது கண்டிப்பாக நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.

சில முக்கிய முடிவுகளை எடுக்கும்போது மனைவியிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். தன்னிச்சையாக எந்த வித முடிவுகள் எடுக்க வேண்டாம்.  யாருக்கும் யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அது மட்டுமில்லாமல் ஜாமீன் கையெழுத்து  போடவே கூடாது என கவனம் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு பணம் நான் பெற்றிருக்கிறேன் என்று எந்தவித பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். பணவரவு ஓரளவு திருப்தி தரும் இடத்தில் இருக்கும். இழுபறியாக சில காரியங்கள் நடந்து முடியும்.

அதே போல அடுத்தவரின் உதவியும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும் செயலில் வேகம் காணப்படும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். அனைத்து விஷயங்களும் உங்களுக்கு ஏற்றது போல் மாறும். காதலர்களுக்கு ஓரளவு இனிமை காணும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்:4 மற்றும் 5

அதிஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |