தனுசு ராசி அன்பர்களே …! புதிய செயல்களை மிக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். முக்கிய பணிகள் சிறப்பாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாக இருக்கும். உபரி வருமானம் கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும் சூழ்நிலை வரலாம். கணவர் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பிள்ளைகளிடம் அன்பாக நடந்துக்கொள்ள வேண்டும். அவர்களின் வெற்றிக்காக நீங்கள் கடுமையாக உதவிகளைச் செய்வீர்கள். அதே போல அவருடைய கல்வி பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். தேவையில்லாத பிரச்சனையில் மட்டும் மூக்கை நுழைக்க வேண்டாம்.உடல் ஆரோக்கியத்திலும் கவனம் இருக்கட்டும். தேவையில்லாத உணவு வகைகளை உண்டு விட்டு பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். இன்று காதலர்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும்.
பேச்சில் கண்டிப்பாக நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.