Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படும்…எண்ணம் மேலோங்கும்…!

தனுசு ராசி அன்பர்களே …!   இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும். பலருடைய அன்பிற்கு பாத்திரமாவீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஊதிய உயர்வு கிடைக்கும். இன்று வீட்டில் உள்ள பொருட்களை கவனமாகப் பாதுகாப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது ரொம்ப கவனமாக கையாளவேண்டும். எப்படிப்பட்ட சிக்கல்களை சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். எந்த ஒரு சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடாமல் இருங்கள்.

மாணவர்களை எப்படி பட்ட பாடங்களையும் படித்துவிடுவார்கள். அதேபோல பயம் இருந்து கொண்டேதான் இருக்கும். தேவையில்லாத விஷயத்திற்காக கவலை மற்றும் கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகளில் வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு விஷயத்தையும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை வாக்கு வாதத்தை மட்டும் தயவு செய்து தள்ளிவைப்பது ரொம்ப நல்லது. மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும்.

தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். அதுபோலவே காதலர்கள் பேச்சில் கண்டிப்பாக நிதானத்தை கடைபிடித்து ஆகவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |