தனுசு ராசி அன்பர்களே…! தன லாபமும் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றமும் வாழ்க்கையில் வெற்றியும் ஏற்படும். மதிப்பும் மரியாதையும் கூடும். மனைவி மக்களின் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பெண்களின் உதவிகளைப் பெறுவீர்கள். இன்று உச்சத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்புக்களை கிடைக்கப்பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
சாமர்த்தியம் ஏற்படும் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகளும் சாதகமான முடிவை கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டியிருக்கும். குழந்தைகளின் கல்விக்காக மனமும் கொஞ்சம் அலைபாய்ந்து கொண்டிருக்கும்.
தேவையில்லா விஷயத்திற்காக மட்டும் குழப்பம் கொள்ள வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டியும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.