தனுசு ராசி அன்பர்களே …! இன்று தன வரவு கூடும் நண்பர்கள் உங்களுக்கு ஓடிவந்து உதவிகளை செய்வார்கள்.சுகமான இனிய மகிழ்ச்சி ஏற்படும் பெயரும் புகழும் கூடும்.சொந்த வீடு அமையும் அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்துசேரும். குறுக்குவழிகளை தயவுசெய்து தேடவேண்டாம்.நேர் வழியிலேயே எதையும் சாதித்து கொள்ளுங்கள்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.புதிய முதலீடுகள் மட்டும் இப்போதைக்கு ஏதும் வேண்டாம்.தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் கொஞ்சம் குறையும் விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள்.
எதையும் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை செய்யுங்கள்.நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் முக்கியமான பணி நிறைவேறும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். தூரதேசத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். கணவன் மனைவியைப் பொறுத்தவரை சின்ன சின்ன வாக்குவாதங்கள் சின்ன சின்ன சண்டைகள் வந்து செல்லும் ஆனால் எதையும் தயவு செய்து நீங்கள் பெரிதுபடுத்த வேண்டாம். பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடித்தால் மட்டுமே இன்றைய நாள் உங்களுக்கு ரொம்ப சிறப்பாக செல்லும்.
எந்த விதத்திலும் நன்மையே உங்களுக்கு நடக்கும். திருமணத்தை பற்றிய பேச்சுவார்த்தை நடத்தினால் மிக சிறப்பாக நல்லபடியாக முடியும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.