Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…ஆசைகள் நிறைவேறும்…உடல்நலத்தில் கவனம் தேவை…!

 

தனுசு ராசி அன்பர்களே ..!   இன்று நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். இன்று மனக்கலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். எதிர்த்து செய்பவர்கள் அடங்கி விடுவார்கள்.

பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர் பாலினரின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். இன்று செயலில் ஓரளவு முன்னேற்றம் காணப்படும். உடல் ஆரோக்கியத்தை கொஞ்சம் கவனமாக, பொறுப்பாகவும் பார்த்துக்கொள்ளுங்கள். சரியான உணவை எடுத்துக்கொள்ளுங்கள், சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். உடல் ஆரோக்கியத்தின் மீது ரொம்ப கவனமாக தான் செயல்பட வேண்டும். காதலர்களுக்கு இன்று அற்புதமான நாளாக இருக்கும்.

ஆனால் பேசும்போது சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்தாலும் கவலைப் படாதீர்கள். எல்லா பிரச்சினைகளையும் சரியாகிவிடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் ரொம்ப சிறப்பாக இருக்கும். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |