தனுசு ராசி அன்பர்களே ..! உறவினர் எதிர்பார்ப்புடன் நடந்து கொள்வார்கள். அவரிடம் விரக்தி மனப்பாங்குடன் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது. தொழில் வியாபாரத்தில் மிதமான அணுகு முறையைக் கையாளுவது ரொம்ப நல்லது. இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்னியோன்யம் இருக்கும். ஒவ்வாத உணவுகளை மட்டும் தயவு செய்து எடுத்து கொள்ள வேண்டாம்.
அதேபோல இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் யாருக்கும் எந்தவித வாக்குறுதியும் கொடுக்காதீர்கள். அதுபோலவே கடனும் இன்று வாங்க வேண்டாம். இன்று வீடு மனை விஷயங்களில் ஓரளவு ஆதாயம் ஏற்படும். நல்ல மனிதர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனம் இருக்க மட்டும் இருந்து கொண்டே இருக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே பேசும்போது நிதானத்தைக் கடைபிடிப்பது ரொம்ப நல்லது. இன்று யாரிடமும் வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம் கவனம் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து மிகவும் சிறப்பாக இருக்கும். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.