Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு… ஆரோக்கியத்தில் கவனம்…அவசரம் வேண்டாம்…!

 

தனுசு ராசி அன்பர்களே ..!   இன்று காரிய வெற்றிக்கு இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள் ஆகத்தான் இருக்கும். புதிய முயற்சிகளை தயவுசெய்து தள்ளிப் போட்டு விடுங்கள். ஆரோக்கியம் சீராக மருத்துவமனையை நாடிச் செல்லக் கூடிய சூழ்நிலை உருவாகும். சரியான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். அதாவது செரிமான பிரச்சனை கொஞ்சம் இருக்கும் கவனத்தில் கொள்ளுங்கள்.

கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும்.  வாக்கு வாதத்தை மட்டும் தவிர்த்துவிடுங்கள். அவசர முடிவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள் காரியத்தில் தயவுசெய்து அலட்சியப்போக்கு ஏதும் காட்ட வேண்டாம். வீண் வாக்குவாதங்கள் இருந்தாலே எந்த ஒரு காரியமும் செய்ய முடியாது அதனால் நிதானமாக பேசுவது ரொம்ப நன்மையை கொடுக்கும்.இன்று வெற்றி பெறுவதற்கு கூடுதலாகத்தான் உழைப்பு தேவைப்படும்.

இருந்தாலும் இன்றைய நாள் ஓரளவு சரி சமமான நாளாகவே இருக்கும். இன்று முக்கிமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.  ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால்எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் இருக்கலாம்

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஊதா நிறம்.

Categories

Tech |