Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…செலவுகள் குறையும்…சிந்தனை திறன் அதிகரிக்கும்…!

தனுசு ராசி அன்பர்களே …!  இன்று அன்றாட பணிகள் நன்றாக நடைபெறும். வீட்டுப் பராமரிப்பில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். கூட்டுத் தொழில் முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் பெயரும் புகழும் கூடும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். இன்று விரும்பிய ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். வீடு வாங்க வாய்ப்பு நிறைவேறும்.

தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை அடைவார்கள். வியாபாரிகள் புதிய கிளைகள் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். எடுத்த முயற்சி மிகவும் சிறப்பாக இருக்கும். சிந்தனை திறன் அதிகரிக்கும். திட்டங்களை தீட்டி இன்று காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்று நாள் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.

சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மேலும் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |