தனுசு ராசி அன்பர்களே …! சந்ததி விருத்தி ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும் தன லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு பெருகும். மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு மிகுந்த எச்சரிக்கை வேண்டும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். ஆவணங்கள் அனைத்தையும் ஒரு முறைக்கு இரு முறை வாசித்து வைத்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது.
சக பணியாளர்களின் வேலைகளில் உதவி தேவைப்படும். எதைப்பற்றியும் சிந்திக்காமல் காரியத்தை மட்டும் கவனமாக சிந்தியுங்கள்.. பழைய பாக்கிகளை வசூல் செய்யும் போது கோபத்தை மட்டும் காட்ட வேண்டாம். நிதானமாகப் பேசுங்கள். இன்று காதலர்கள் பொறுமை காக்க வேண்டும் வாக்குவாதத்தில் ஏதும் ஈடுபட வேண்டாம். இன்று சகோதரிகளிடம் ஒற்றுமை இருக்கும். இருந்தாலும் சகோதரனும் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடித்தால் ரொம்ப நன்றாகவே இருக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இருக்கும்.
குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்க கூடும். வெளியூரிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். வெளிர் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் என்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறம்.