தனுசு ராசி அன்தபர்களே ..! இன்று ஒதுக்கிவைத்த பணியை நிறைவேற்றுவீர்கள். தடையுடன் இருந்த காரியம் இன்று சிறப்பாக நடக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிரமம் விலகிச் செல்லும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். நண்பர்களிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். அவரிடம் பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள் திருப்திகரமான பலனை தரும்.
அலைச்சலும் பளுவும் இருக்கத்தான் செய்யும் அதை பற்றி எல்லாம் கவலை படாதீர்கள். மனதில் தேவையற்ற சிந்தனை வந்து கொண்டிருக்கும். அரசாங்கத்தால் சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உடன் பணிபுரிவோர் பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும். இரவு நீண்ட நேரம் முழிக்க வேண்டி இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு, சரியான நேரத்திற்கு தூங்க செல்வது தான் மிக சிறப்பு கடைபிடியுங்கள்.
உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும்.இன்று கணவர் மனைவிக்கிடையே தேவையில்லாத வாக்குவாதங்கள் வரக்கூடும் அதிலும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் என்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்கள் : 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்