Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு.. சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும்…புதிய எண்ணங்கள் ஏற்படும்..!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று பொது வாழ்வில் புகழ் கூடும் நாளாகத்தான் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். ஆன்மிகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று  கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். புதிய எண்ணங்கள் ஏற்படும், புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.

வீண் வாக்குவாதங்களை  மட்டும் தயவு செய்து இன்று தவிர்த்துவிடுங்கள். எதிர்ப்புகள் இருக்காது, செல்வம் சேரும், மனம் நிம்மதியாக இருக்கும். காதலர்களுக்கு காதல் கைகூடும் நாளாகத்தான் இன்று  இருக்கும். மாணவர்களுக்கும் இன்று பொன்னான நாளாகத்தான் இருக்கும். கல்வியில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும்.

இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள்,  அனைத்தும் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான  திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் இளம் நீலம் நிறம்

Categories

Tech |