தனுசு ராசி அன்பர்களே, உங்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வேற்று மதத்தவர் அறிமுகம் ஆவார்கள். புதிய முயற்சிகள் பலிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
தன்னம்பிக்கை துளிர்விடும் நாள் தான் இன்றைய நாள் இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை, தீமை பற்றிய கவலை படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும். எதிர்ப்புகள் விலகி செல்லும்.
திருமண தொடர்பான காரியங்களில் சாதகமான பலனே இன்று கொடுக்கும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் திறம்பட செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் இன்று அறியப்படும். உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.
இன்று வாகனத்தில் செல்லும்போது மட்டும் நிதானமாக செல்லுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.
அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தேசங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு