Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.. தெய்விக சிந்தனை மேலோங்கும்..!!

தனுசு ராசி அன்பர்கள், இன்று  லட்சிய மனதுடன் பணியில் ஈடுபடுவீர்கள், தொழில் வியாபாரம் வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும்,பணவரவு  நன்மையை கொடுக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும், இஷ்ட தெய்வ வழிபாடு இன்று நடத்துவீர்கள். இன்று தொடர் கோவம், டென்ஷன் ஏற்படும். எதையும் கட்டுப்படுத்தி கொள்வது ரொம்ப நல்லது. வீண் அலைச்சல், மன குழப்பம், போன்றவை கொஞ்சம் ஏற்படலாம்.

இன்று பொறுமையை  கையாளுங்கள்  அது போதும். இன்று  இழுபறியான காரியங்கள் கூட  சாதகமாக முடியும் . ஆனால் வாகனத்தில் செல்லும்போதும் ரொம்பக் கவனமாக செல்ல வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் கையாள முழுதும் கூடுதல் கவனத்துடன் செய்வது ரொம்ப நல்லது. இன்று  முடிந்தால் ஆலய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் சிறப்பாக நடக்கும்.

இன்று  வெளியூர் பயணத்தின் போது ரொம்ப கவனமாக செல்லுங்கள், உடைமைகள்  மீது ரொம்ப கவனமாக இருங்கள், உடல் ஆரோக்கியத்திலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். இன்று  மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும் கல்வியில்  முன்னேற்றம் உண்டு.விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் ஏற்படும்.

இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அது மட்டுமில்லாமல் சித்தர்கள்  வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்:  நீலம் மற்றும் வெள்ளை

Categories

Tech |