தனுசு ராசி அன்பர்களே, இன்று பயணங்களால் பலன் கிடைக்கும் நாளாகவே இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது அவசியம். பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று தாமதப்பட்டு எந்த காரியமும் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக வெளியூருக்கு அலைய வேண்டி இருக்கும்.
வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். மேலதிகாரிகள் சொல்லி ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது ரொம்ப நல்லது. இன்று எந்த ஒரு முயற்சியும் பொறுமையாகவே செய்யுங்கள். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். மேற்கண்ட முயற்சியில் வெற்றியும் கிடைக்கும். விளையாட்டுத்துறையில் இன்று ஆர்வம் செல்லும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம். இதை வாரம் வாரம் எப்பொழுதுமே செய்வதற்கு பழகிக் கொள்ளுங்கள்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்:3 மற்றும் 9