Categories
மாநில செய்திகள்

தபால் அலுவலகங்கள் மூலம் சர்வதேச பார்சல் சேவை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அருணாச்சலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தீபாவளி, கிறிஸ்மஸ், பொங்கல் உள்ளிட்ட தொடர்ந்து வரும் பண்டிகை திருவிழா நாட்களில் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் நபர்கள், கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசு பொருட்கள், ஆடை அணிகலன்கள், உணவு உள்ளிட்ட பொருட்களை இந்திய அஞ்சல் துறை மூலம் அனுப்பி வைக்கலாம். சேலம் பழைய பஸ் நிலைய அருகில் உள்ள சேலம் தலைமை தாபால் அலுவலகத்தில் பிரத்யோக சர்வதேச பார்சல் சேவை மையம் பண்டிகை காலம் முடியும் வரை இரவு 9 மணி வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதனைத் தொடர்ந்து சர்வதேச தபால் பார்சல் சேவையானது ஆத்தூர், தலைமை அஞ்சல் அலுவலகம், அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை, சேலம் தெற்கு, அம்மாபேட்டை, அழகாபுரம், பேர்லேண்ட்ஸ், கொண்டாலாம்பட்டி, கெங்கவல்லி, பேளூர், வாழப்பாடி, தலைவாசல் உள்ளிட்ட அனைத்து துணை அஞ்சல் அலுவலத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறை மூலம் சர்வதேச பார்சல் குறைவான கட்டணத்தில் விரைவாக சென்று சேருகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் ஏற்றுமதியில் சர்வதேச தபால், பார்சல் சேவையை அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களுக்கு சென்று பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |