நகராட்சித் தேர்தலில் தபால் ஓட்டு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகராட்சித் தேர்தலை முன்னிட்டு நகரசபை ஆணையர் கீதா வார்டு வாரியாக நேரில் சென்று முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு செய்துள்ளார்.
பின்னர் திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் வைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுடன் தேர்தல் முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் தபால் ஓட்டு போடுவதற்காக ஓட்டுப் பெட்டி வைத்து சீல் வைக்கும் பணியை அவர் ஆய்வு செய்துள்ளார். மேலும் தபால் ஓட்டு போடுவதை பதிவு செய்ய ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.