குற்றவழக்குகளில் தண்டனை பெற்ற 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை பிடிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹோமாவதி ஆகியோர் திருப்பத்தூர் டவுன் பகுதியில் இருந்த 15 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.