Categories
சினிமா தமிழ் சினிமா

‘தப்பு மேல தப்பு செய்கிறார்கள்’… தட்டிக் கேட்க போகிறார் கமல்!… வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான முதல் புரோமோவில் ஆரி – பாலாஜி இருவரும் கடுமையான வாக்குவாதங்களால் மோதிக் கொண்டிருந்தனர் . தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் பேசிய கமல் ‘சட்டப்படி நடப்பது, நியாயமாக நடப்பது, நேர்மையாக இருப்பது இதெல்லாம் சுவாரசியம் அற்றது என நினைப்பது நியூ நார்மலாக இருக்கிறது .

என்ன பொறுத்த வரை அது அப்நார்மல் . மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுனா ஸ்ட்ரைட் ஃபார்வேர்ட் கிடையாது. குரலை உயர்த்தி பேசினா நியாயம் ஆகாது . தப்பு மேல தப்பு செய்கிறார்கள் என்ன செய்வது?. தட்டிக் கேட்போம்’ என அதிரடியாக பேசுகிறார் . இதிலிருந்து இன்றைய எபிசோடில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் .

Categories

Tech |