Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணா இப்படித்தான்… கொரோனா தடுப்பு விதி முறைகள்… அதிகாரிகளின் அறிவுரை…!!!

கொரோனா தடுப்பு விதிமுறையை மீறி செயல்பட்டுக்கொண்டிருந்த  13 கடைகளுக்கு 6,500 ரூபாய் அபராதம் விதித்ததோடு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல அதிகாரிகள் கிராமங்கள்தோறும் சென்று அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனாவிற்கான பரிசோதனையும் 45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் போடும் முகாமை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் சுபாஷினி தலைமையில் துணை ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் குழுவினருடன் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கின்றனரா என்பதைக் கண்காணிக்க திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள மருந்து, வெற்றிலை, மளிகை போன்ற 13 கடைகள் அரசு நெறிபடுத்திய விதிமுறைகளை மீறி செயல்பட்டுக் கொண்டிருந்தது. இதனை பார்த்த அதிகாரிகள் உடனடியாக அந்த கடைகளுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்து மொத்தம் 6 ,500 ரூபாய் வசூலித்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் அங்கு கூடியிருந்த கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் இவ்வாறு ஒரே இடத்தில் கூடி இருந்தால் கொரோனா தொற்று அதிகமாக பரவ அபாயம் உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் பொதுமக்கள் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு இடையே சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள்  அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |