ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு வெற்றி பெற்ற ஆறு இளம் வீரர்களுக்கு மகேந்திரா “தார் “கார் பரிசாக வழங்கப்படும்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. முன்னணி வீரர்கள் இல்லாத போதிலும் இளம் வீரர்கள் ஆஸ்திரேலியாவை எதிர்த்து வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
அதன்பின் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு அவர்களின் குடும்பத்தார்,உறவினர்கள்,நண்பர்கள்,பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடிய நடராஜன், ஷர்துல் தாக்கிர், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 6 இளம் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மஹிந்திரா நிறுவனத்தின் “தார்” கார் பரிசாக வழங்கப்படும் என்று மகேந்திரா முழும தலைவர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெறிவித்துள்ளார்.