Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தரலனா திருமணத்தை நிறுத்திடுவ…. பனியன் நிறுவன உரிமையாளருக்கு மிரட்டல்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

பனியன் நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறித்து சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணக்கம்பாளையத்தில் தினேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் தனது அண்ணன் மணிகண்டனுடன் இணைந்து பனியன் நிறுவனம் நடத்தி வருகின்றார். இதனையடுத்து தினேசுக்கு அதே ஊரை சேர்ந்த டிரைவர் கருப்பணசாமி, திருமூர்த்தி மற்றும் கணேஷ் ஆகிய 3 பேரும் நண்பர்களாக இருந்தனர். ஆனால் தினேசுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்கள் 3 பேரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரிடம் இருந்து பிரிந்து சென்று விட்டனர். இந்நிலையில் தினேசுக்கும், ஒரு 30 வயதுதுடைய பெண்ணுக்கும் இடையே தவறான தொடர்பு இருப்பதாக கூறி டிரைவர் கருப்பண்ணசாமி தொடர்ந்து 7 ரூபாய் மற்றும் 21 ஆயிரம் ரூபாய் என அவரிடம் பணம் பறித்துள்ளார்.

மேலும் அந்த பெண்ணையும் மிரட்டி 10 ஆயிரம் ரூபாயை பணம் கருப்பண்ணசாமி பறித்துள்ளார். இந்நிலையில் தினேசின் அண்ணனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து கருப்பணசாமி, திருமூர்த்தி மற்றும் கணேஷ்  ஆகிய 3 பேரும் மீண்டும் தினேஷிடம் ஒரு லட்சம் ரூபாய் தரவேண்டும் என்றும் பணம் தராவிட்டால் பெண்ணுடன் தவறான உறவு இருப்பதாக அனைவரிடமும் கூறி அண்ணனின் திருமணத்தை நிறுத்துவதாகவும் மிரட்டியுள்ளனர். அதன்பின் தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கருப்பணசாமி, திருமூர்த்தி போன்றோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கின்ற கணேசை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |