Categories
சினிமா தமிழ் சினிமா

ஆமாம் அப்படித்தான்!…. தைரியமா சொன்ன “வாரிசு” பட தயாரிப்பாளர்…. ஜாலியாக கேலி செய்யும் ரசிகர்கள்….!!!!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் “வாரிசு”. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் குஷ்பு, சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். பொங்கலுக்கு வெளியாகும் இந்த படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவானது கடந்த 24 ஆம் தேதி மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.

இவ்விழாவில் தயாரிப்பாளர் தில்ராஜூ மேடைக்கு வந்தபோது ரசிகர்கள் நம்பர்-1 நம்பர்-1 என கூச்சலிட்டனர். அதற்கு தயாரிப்பாளர் தில்ராஜூ “ஆமாம், விஜய் தான் நம்பர்-1” என கூறினார். ஏற்கனவே விஜய் தான் நம்பர்-1 நடிகர் என அவர் கூறியது சர்ச்சையானது. இந்நிலையில் மீண்டுமாக அவர் இவ்வாறு கூறியுள்ளதால் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் நிஜமாகவே தில்ராஜூக்கு தைரியம் அதிகம் தான் என ஜாலியாக கேலி செய்து வருகின்றனர்.

Categories

Tech |