Categories
உலக செய்திகள்

தன்னை தற்காத்துக்கொள்ளவே இவ்வாறு நடந்து கொண்டேன்…. இணையத்தில் வைரலான வீடியோ…. உண்மையை உடைத்த இளம்பெண்….!!

இணையதளத்தில் மிகவும் வைரலான கருப்பின மனிதருடன் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இனவெறியை தூண்டும் விதமாக சண்டை போடுவது தொடர்பான வீடியோ குறித்த உண்மை கதையை அந்த இளம்பெண் கூறியுள்ளார்.

லண்டனில் Hassina Ahmed என்னும் 22 வயதுடைய இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 16ஆம் தேதி லண்டனிலுள்ள Basildon என்னும் பகுதியில் ரயிலில் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அல்ஜீரியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக நெருங்கி அவருடைய செல்போன் நம்பரை கேட்டுள்ளார்.

மேலும் அவர் ஒரு முஸ்லிம் என்பதை தெரிந்துகொண்டு இளம் பெண் அணிந்திருந்த ஆடை குறித்தும் அநாகரிகமாக பேசியுள்ளார். இதனால் அந்த இளம்பெண் தன்னை தற்காத்துக் கொள்ள அல்ஜீரிய நபரிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அவர் இனவெறி தாக்குதலை தூண்டும் விதமாக நடந்து கொண்டதாக இளம் பெண்ணிற்கு பல கொலை மிரட்டல்கள் சென்றுள்ளது.

இதனால் அந்த இளம்பெண் பிரபல ஊடகம் ஒன்றில் இதுதொடர்பான மேலே குறிப்பிட்டுள்ள உண்மை கதையை தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி அந்த இளம்பெண் கூறியதாவது, தான் இனவெறி தாக்குதலை தூண்டும் விதமாக அந்த நபரிடம் நடந்து கொள்ளவில்லை என்றும், அல்ஜீரியா நபரிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவே அவ்வாறு நடந்தேன் என்றும் கூறியுள்ளார். மேலும் தான் இதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |