Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள்…. தூய்மை பணியாளருக்கு நடந்த சம்பவம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

முன் விரோதத்தால் தற்காலிக தூய்மை பணியாளரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிபாளையம் பகுதியில் விநாயகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள சூசையாபுரம் பகுதியில் தங்கியிருந்து தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் விநாயகத்திற்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து விநாயகம் ஒடக்காடு லிங்க கவுண்டன் தெருவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் விநாயகரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் அவர்கள் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விநாயகத்தை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதனால் விநாயகம் ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் திருப்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விநாயகத்தின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதில் விநாயகத்திற்கு அதே பகுதியில் வசிக்கும் விஷ்வா மற்றும் கார்த்தி ஆகியோருடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்தியை விநாயகம் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி தனது நண்பரான விஷ்வா மற்றும் சிவா ஆகியோருடன் சேர்ந்து விநாயகத்தை கொலை செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சிவாவை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கார்த்தி மற்றும் விஷ்வா ஆகிய இருவரையும் தேடி வந்த நிலையில் இருவரும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு நீதிமன்றத்தில் சரணடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |