மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களை அடுத்து இப்போது சிம்பு “பத்து தல” படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், அடுத்த வருடம் படம் திரைக்கு வருகிறது.
மேலும் இப்படத்துக்கு பின் கொரோனா குமார் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படங்களில் சிம்பு நடிக்கப்போகிறார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியது. எனினும் அது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்படவில்லை.
அதே நேரம் சிம்பு மேலும் சில இயக்குனர்களிடத்திலும் கதை கேட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் சிம்பு ஒரு தற்காப்பு கலையின் பயிற்சியில் தீவிரமாக ஈடுபடப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அடுத்து தான் நடிக்க இருக்கும் படத்துக்காக இந்த பயிற்சியில் சிம்பு ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.