Categories
உலக செய்திகள்

நான் சாக போறேன்…! தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்… பிறகு நடந்த சம்பவம்… என்ன செய்தார் தெரியுமா ?

தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் ஒருவர் தற்போது தன்னை காப்பாற்றியவர்களுக்கு நன்றி கூறியதுடன் மகிழ்ச்சியான ஒரு செய்தியையும் கூறியுள்ளார். 

பிரிட்டனில் உள்ள கென்டை சேர்ந்தவர்  19 வயதான இளம்பெண் Jess Paramor. இவர் மன அழுத்தம் காரணமாக பாலத்திலிருந்து குதித்து  தற்கொலை செய்ய  முடிவெடுத்துள்ளார். அப்போது அவ்வழியே சென்ற Tony Witton  என்ற நபர் மெதுவாக Jess Paramor-ரிடம்  பேச்சுக் கொடுத்து கையை பாசத்துடன் பிடித்துக்கொண்டு அவரது மனதை மாற்றி உள்ளார். பின்னர் Jess Paramor-க்கு  மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவரது நிலைமை சற்று முன்னேறி இருந்தாலும் நான்கு நாட்களுக்குப் பிறகு அவர் அதே இடத்திற்கு சென்று மீண்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்பொழுது சினிமாவுக்கு சென்று  கொண்டிருந்த ஒரு தம்பதியினர் Jess Paramor-ரை  மீட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது  Jess Paramor-க்கு  20 வயதாகிறது. அவர் தன்னை  காப்பாற்றியவர்களுக்கு  நன்றி தெரிவிப்பதற்காக சமூகவலைதளங்களில் தேடியுள்ளார். ஆனால் எந்த சமூக ஊடகத்திலும் அவர்கள்  இல்லை. இருப்பினும் அவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் தன்னை  உயிரை காப்பாற்றியவர்களை கண்டு பிடித்துள்ளார்.

மேலும் அவர்களிடம் தான் நன்றாக இருப்பதாகவும் மருந்தக துறை தொடர்பாக படித்து வருவதாகவும் கூறியுள்ளார். Jess Paramor கூறியதை கேட்டு அவரை காப்பாற்றியவர்கள் சந்தோசத்தில் உள்ளனர்.  Jess Paramor-ரை   தற்கொலையிலிருந்து முதலில் மீட்ட  Tony Witton  கென்டில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அவர்Jess Paramor தற்கொலைக்கு முயன்றதை பார்த்ததும் தான் அதே வயதுடைய இரண்டு பெண் குழந்தையின் தந்தை என்று தனக்குள் தோன்றிய எண்ணம் தான் அவரை காப்பாற்றியது என்று கூறுகிறார்.

மேலும் மன நல பிரச்சினைகளுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்ட Jess Paramor அதன் பக்க விளைவுகள் குறித்து நன்றாக அறிந்து கொண்டதால் அந்த மருந்துகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளார்.

Categories

Tech |