Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகள் வயது பெண்ணுடன் காதல்….. கள்ளக்காதலி வீட்டின் முன் டிரைவர் மனைவி தர்ணா…. குமரியில் பரபரப்பு…!!

குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதி அருகே  தனது மகள் வயது இருக்கும் மாணவியிடம் கள்ளக்காதலில் ஈடுபட்ட டிரைவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த மினிபஸ் டிரைவர் ஒருவர் அப்பகுதி வழியாக அவரது பேருந்தில்  கல்லூரிக்குச் செல்லும் பல மாணவிகளிடம் புதுப்புது பெயர்களால் அறிமுகம் செய்து கொண்டு தனது காதல் வலையில் அவர்களை விழ வைத்து அவர்களது  வாழ்க்கையை நாசம் செய்து உள்ளார். ஆனால் அவர்கள் யாரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்காத காரணத்தினால்  அவர் தொடர்ந்து சேட்டை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் களியக்காவிளை கல்லூரியில் படித்து வரும் இளம் பெண் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது காதலாக மாறியதால் மாணவியின் ஏழ்மை நிலையை பயன்படுத்தி அவரை திருமணம் செய்து கொள்ளாமலேயே திருமணத்திற்கு மீறிய  உறவை வைத்து அவருடன் வாழ்ந்து வந்துள்ளார் டிரைவர்.  இதையடுத்து தனது மனைவி, 19 மற்றும் 17 வயது மகள்கள்  ஆகிய 3 பேரையும் தவிக்கவிட்டு கல்லூரி மாணவியுடன் உல்லாசமான வாழ்க்கையை டிரைவர் அனுபவித்து வர, 

இதனால் விரக்தி அடைந்த மனைவி தனது இரண்டு மகள்களுடன் காவல் நிலையம் சென்று புகார் அளிக்க, காவல்துறை அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து  கல்லூரி மாணவி வீட்டுக்கு  தனது இரண்டு மகள்களுடன்   சென்ற டிரைவரின் மனைவி அங்கே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின் அவரை கண்டதும் அக்கம்பக்கத்தினர் வந்து விசாரிக்கையில், எனது கணவரை இந்த கல்லூரி பெண் காதலித்து வருகிறார். இவருக்கும்  எனது மகளுக்கும் ஒரே வயது தான். இனி எனது கணவருடன் அவர் சேர்ந்து வாழக்கூடாது என் குழந்தைகளின் நிலையை கருத்தில் கொண்டு அவரை விட்டு பிரிந்து விட வேண்டும் என்று சண்டையிட்டதற்கு, பதில் கூறிய   கல்லூரி மாணவி , எனக்கும், உனது கணவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூற பதட்டம் தொடரவே காவல்நிலையத்தில்  தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண், கல்லூரி மாணவியின்   வீட்டார் ஆகியோரை  அழைத்து கொண்டு குழித்தலை காவல் நிலையத்திற்கு சென்று அங்கே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இதில் சம்பந்தப்பட்ட டிரைவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |