Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டம்…. தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. திருப்பூரில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெண் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலவஞ்சிப்பாளையம் பகுதியில் அருணாதேவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 13-04-2019 அன்று பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அப்போது அவரை செவிலியர்கள் சரியாக கவனிக்காமல் இருந்ததாகவும் கடந்த 25-04-2019 அன்று அருணா தேவியை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அருணா தேவி இறந்துள்ளார். இந்நிலையில் அருணா தேவிக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அருணாதேவியின் தாயார் ஜீவா வந்துள்ளார். அங்கு தாய் ஜீவா தனது மகள் இறப்புக்கு காரணமான அரசு மருத்துவமனை செவிலியர்கள், மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திடீரென தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மனு கொடுக்க அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

.

Categories

Tech |