நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 4 வேட்பாளர்கள் சம நிலையில் இருப்பதால் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது சீப்பு சின்னத்தில் போட்டியிட்ட ராஜேந்திரன் மற்றும் சாவி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் அலமேலு தலா 82 வாக்குகள் பெற்று சம நிலையில் இருக்கின்றனர்.
இதனை போல் வடலூர் பகுதியில் வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையின் போது சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ராணி, நிர்மலா ஆகிய 2 பேரும் தலா 169 வாக்குகள் பெற்று சமநிலையில் இருக்கின்றனர்.
அதன்பின் 4 வேட்பாளர்களும் சம வாக்குகள் பெற்று இருப்பதினால் யார் வெற்றியாளர் என்பதை அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து வருகின்ற 16-ஆம் தேதி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் குலுக்கல் நடத்தி வேட்பாளர்களின் வெற்றியை அறிவிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.