அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கிய அரசே உருவாகும் என தலீபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தானிலுள்ள தூதரகங்கள் பாதுகாக்கப்படும். அதிலும் பெண்களிடம் வேற்றுமை காட்டப்படமாட்டாது. குறிப்பாக அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கிய அரசையே அமைக்க விரும்புகிறோம் என்று தலீபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். அப்பொழுது அவரிடம் 1990 களில் இருந்த தலீபான்களுக்கும் தற்பொழுது உள்ள தலீபான்களுக்கும் இடையிலான வித்தியாசம் என்னவென்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது ” தலீபான்கள் இஸ்லாமியர்கள் என்பதால் சித்தாந்தங்கள் மற்றும் நம்பிக்கைகள் அப்படியே இருக்கும் அது மாறாது. ஆனால் அனுபவத்தின் அடிப்படையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. மேலும் தற்போதுள்ள தலீபான்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் அனைத்தையும் வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள்” என்று கூறியுள்ளார்.