கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குஜராத்திலிருந்து பிஸ்கட் ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி திருச்சிக்கு சென்றது. இந்த லாரியை பீகாரை சேர்ந்த குலாம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து லாரி தர்மபுரி மாவட்டம் வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது தொப்பூர் கணவாய் முதல் வளைவில் வந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டிரைவர் குலாம் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் இந்த விபத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த டிரைவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின் விபத்துக்குள்ளான கண்டெய்னர் லாரி அப்புறப்படத்தப்பட்டு போக்குவரத்தானது சீர் செய்யப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.