டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்த்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டையில் இருந்து திருப்பூருக்கு காட்டன் துணி பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அந்த லாரியை ஜெயக்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவருடன் லாரியின் கிளீனர் மகேஷ் இருந்தார். இதனையடுத்து லாரி ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையின் 12-வது கொண்டை ஊசி வளைவு அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் ஜெயக்குமார் மற்றும் மகேஷ் இருவரும் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்தனர். அதன்பின் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தினால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் மூலம் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்தினால் அப்பகுதியில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.