Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடி, அம்பானி, அதானி உருவ பொம்மைகளை கொளுத்தி தசரா கொண்டாட்டம்…!!

மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலம் முழுவதும் பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கௌதம்  அதானி ஆகியோரின் உருவ பொம்மைகளை கொளுத்தி விவசாயிகள் தசரா பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

பதின்ராவில்  உள்ள  பெரிய விளையாட்டு மைதானத்தில் பாரதிய கிசான் யூனியன் தலைமையில் திரண்ட விவசாயிகள் விவசாய சட்டங்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். விலை நிலங்களை பறிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி மோடி, அம்பானி, அதானி பொம்மைகளை அவர்கள் தீயிட்டு கொளுத்தினர். உருவ பொம்மையின் முகத்தில் மோடி, அம்பானி, அதானி புகைப்படங்களை பொருத்தி இருந்தனர்.

விவசாய சட்டங்களால் ஏற்படும் ஆபத்து குறித்தும் விவசாயிகளின் கவலையை கேட்க மோடி அரசும் முன்வரவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பதிண்டா மட்டுமின்றி பஞ்சாபில் பல்வேறு மாவட்டங்களிலும் இதே மாதிரியான போராட்டங்கள் நடைபெற்றன. அங்குள்ள அரசு பள்ளி மைதானத்தில் திரண்ட விவசாயிகள் மோடி மற்றும் தொழிலதிபர்களின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர்.

நாதனா, மாவூர், ராம்புறா உள்ளிட்ட இடங்களிலும் விவசாயிகள் உருவ பொம்மைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்சா, ஷர்துல்கார் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று விவசாயிகள் சட்டங்களுக்கும், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

பஞ்சாப் விவசாயிகளின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் பற்றி கவலை தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விவசாயிகளை கொந்தளிக்க வைப்பது  நாட்டுக்கு நல்லதல்ல என்று கூறியுள்ளார். விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வுகாண பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல்  வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |