Categories
தேசிய செய்திகள்

அந்த ஒரு போன் கால்… திடீரென தலைதெறிக்க ஓடிய கல்யாண மாப்பிள்ளை… பிறகு என்ன நடந்தது..?

பெங்களூரில் கல்யாணம் மணப்பெண் வெட்கப்பட்டு மேடையில் நின்று கொண்டிருந்த போது திடீரென மாப்பிள்ளை அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டம் தரிகேர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் நவீன். இவர்தான் மாப்பிள்ளை. இவருக்கும் சிந்து என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்ட இரு வீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கல்யாணம் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்துகொண்டிருந்தபோது நவீன் பதறி அடித்துக் கொண்டு மேடையை விட்டு கீழே இறங்கி ஓடினார்.

காரணம் என்னவென்றால் அவர் காதலித்த பெண் மேடையில் நின்று கொண்டிருந்தபோது போனில் தொடர்பு கொண்டு இந்த கல்யாணத்தை செய்து கொண்டால் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதைக்கேட்ட உடனே அவர் பயந்து கொண்டு தன் காதலியை பார்க்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் கல்யாண பெண் சிந்து அதிர்ச்சியில் உறைந்தார். மாப்பிளையின் இந்த செயலால் திருமண மண்டபமே கொஞ்ச நேரம் பதற்றம் அடைந்தது.

இவர்கள் யாரும் சிந்துவை சமாதானப்படுத்த முடியவில்லை. அதனால் என்ன செய்வதென்று விழித்துக் கொண்டிருந்தபோது கல்யாணத்திற்கு வந்திருந்த உறவுக்கார இளைஞரை மண்டபத்தில் இருந்தார். அவர் சிந்துவை திருமணம் செய்ய சம்மதிக்கவே இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இதில் என்ன ஸ்பெஷல் என்றால் கல்யாணம் நடப்பதற்கு முந்தைய நாள் வரை ஓடிப் போன மாப்பிள்ளை கோட் சூட் போட்டுக்கொண்டு போட்டோ ஷூட் நடத்தி, கல்யாணத்தன்று காலையில் சிரித்துக்கொண்டே ஹேப்பி ஆக இருந்தாராம். அதன்பின் வந்த ஃபோன் கால் தான் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அந்த மாப்பிள்ளையின் போட்டோஷூட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |