Categories
அரசியல்

”அந்த பயம் இருக்கணும்”துப்பாக்கி விஜய் ஸ்டைலில் முக.ஸ்டாலின் …!!

பெரியார் குறித்த பாஜகவின் சர்சை பதிவு நீக்கத்திற்கு முக.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

பெரியாரின் நினைவு  தினமான இன்று தமிழக அரசியல் தலைவர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில் பெரியாரை இழிவுபடுத்தி பாஜக தனது ட்வீட்_டர் பக்கத்தில் சர்சைக்குரிய பதிவிட்டு , அதற்க்கு எதிர்ப்பு கிளம்பியதால் அதனை தனது ட்வீட்_டர் பக்கத்தில் இருந்து நீக்கியது. இதனைதொடர்ந்து  திமுக தலைவர் முக .ஸ்டாலின் அந்த பயம் இருக்க வேண்டுமென்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் பதிவிட்டுள்ளதில் , #Periyar ஐ இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது.அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்! அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா? என்று பதிவிட்டுள்ளார்.

Image result for ஸ்டாலின் அந்த பயம் இருக்கணும்

இதில் ஸ்டாலின் அந்த பயம் இருக்கணும் என்று தெரிவித்தது , துப்பாக்கி படத்தில் நடிகர் விஜய் அந்த பயம் இருக்கணும் டா என்று தெரிவித்ததோடு ஒப்பிட்டு திமுகவினர் பேசி வருகின்றனர்.

Categories

Tech |