Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதுதான் வாளும், கேடயமும்”…. கொள்கை முரசு கொட்டி கொள்கைகளை பரப்புங்கள்… தொண்டர்களுக்கு பறந்த உத்தரவு….!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பல கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதோடு, மேலும் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அதன் பிறகு பொதுமக்களிடம் ஒவ்வொரு கழகச் செயலாளரும் சமூக வலைதளம் மூலமாகவும், தேநீர் கடைகள் மூலமாகவும், திண்ணை பிரச்சாரம் மூலமாகவும் கொள்கைகளை பரப்புங்கள். உலக கோப்பை கால்பந்து போட்டியில் தோல்வி அடைந்த வீரர்கள் அடுத்தபோட்டியில் இடம் பெறாமல் போகலாம். இல்லையெனில் அதற்கு அடுத்த போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கூட அவர்களுக்கு கிடைக்கலாம்.

இப்படி சின்ன சின்ன மாற்றங்கள் இருந்தாலும் கூட அணியின் நோக்கம் வெற்றி கோப்பை மட்டும் தான். இதுதான் கழக அணிகளின் நோக்கமும் கூட. நாம் வெல்ல வேண்டியது விளையாட்டு களத்தில் அல்ல, கருத்தியல் போர்க்களத்தில். கொள்கைகள் மற்றும் சாதனைகள் தான் நமக்கு வாளும், கேடயமும் ஆகும்.

இதை தமிழ்நாட்டின் சிறிய கிராமங்கள் வரை சென்று அனைத்து மக்களிடமும் பரப்ப வேண்டும். ஜனநாயக படையென முன்னோக்கி விரைந்திடுவீர். கொள்கை முரசு கொட்டி சாதனை முழக்கமிட்டு வெற்றிகளை தொடர்ந்து குவித்திடுவீர் என்று  குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மக்களிடம் சிறப்பாக கொள்கைகளை பரப்ப வேண்டும் என தொண்டர்களுக்கு வாழ்த்துக்களையும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |