செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடம், சுதந்திர தினத்தில் தேசியக்கொடி ஏற்ற கூடாது சொன்னதாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண், காவல்துறைக்கு கடிதம் எழுதி அனுப்பி இருக்காங்க. எனக்கு பாதுகாப்பு வேண்டும் அப்படின்னு சொல்லி இருக்காங்க. அதுக்கு நீங்க என்ன சொல்றீங்க? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்க்கு பதிலளித்த திருமாவளவன்,
பல இடங்களில் இது போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய கொடியை ஏற்ற இயலாத நிலை இருக்கிறது. இந்த முறை அப்படிப்பட்ட ஒரு நிலைமை இருக்கக் கூடாது மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதுகுறித்து கடுமையான வழிகாட்டுதலை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும்.
சாதியின் அடிப்படையில் இது போன்ற பாகுபாடுகள் நிலவுவதை குறிப்பாக தேசியக்கொடி ஏற்றுவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை என்கிற பாகுபாடு நிலவுவதை தடுக்க வேண்டும். மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு இதை சுட்டிக் காட்டுகிறோம்.
கள்ளக்குறிச்சியில் மட்டுமல்ல. பல இடங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் கடந்த ஆகஸ்ட் 15 நடந்திருக்கிறது. இந்த ஆண்டு அது தொடரக்கூடாது. உரிய வகையிலே அவர்களுக்கு பாதுகாப்பை அளிக்க வேண்டும். தமிழக அரசு அதற்கான வழிகாட்டுதல்களை தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என திருமாவளவன் தெரிவித்தார்.