கொரோனா விதிமுறைகளை மீறி நாட்டு கோழி சந்தை செயல்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக ஊடரங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா குறைந்துள்ளதால் தமிழக அரசு ஊடரங்கில் படிப்படியாக தளர்வுகளைஅறிவித்துள்ளது. ஆனால் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் வாரச் சந்தைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இருந்தபோதிலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம் கடைவீதியில் கொரோனா விதிமுறைகளை மீறி நாட்டுக் கோழி சந்தை நடைபெற்றுள்ளது. மேலும் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் சந்தையில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.