Categories
சினிமா

“தாதா சகோப் பால்கே” விருது இவருக்கு கொடுக்கலாம் … பரிந்துரைக்கும் வைரமுத்து …!!

பாரதிராஜா பிறந்தநாளுவாழ்த்து தெரிவித்த வைரமுத்துக்கு “தாதா சகோப் பால்கே” விருது அவருக்கு கொடுக்கலாம் என பரிந்துரைசெய்துள்ளார். 

இன்று பிறந்தநாள் காணும் இயக்குநர் பாரதிராஜா,  தமிழ் சினிமாவில் மண்ணின் வாசனையை வீச செய்து புதுமை செய்தவர். கவிஞர் வைரமுத்து சினிமாவிற்கு தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனரான பாரதிராஜாவுக்கு தனது வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில் பாரதிராஜாவை “தாதா சகோப் பால்கே” விருதிற்காக பரிந்துரை செய்கிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் மண்ணின் இருதயத்தை, கல்லின் கண்ணீரை, சரளைகளின் சரளி வரிசையை, அறிவாளின் அழகியலை, பாவப்பட்ட தெய்வங்களை, ஊனப்பட்டோர் உளவியலை, கலாச்சார புதைபடிவங்களைக் கலையாத கலை செய்தவர் இவரே ஆவார் என  புகழ்ந்து வாழ்த்தியிருக்கின்றார். அதனைத் தொடர்ந்து இறுதியில் நீங்களும் பரிந்துரைக்க வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் நீங்களும் என்ற வார்த்தையை மட்டும் கூறியுள்ளார்.

Categories

Tech |