செங்கல்பட்டில் விபத்துக்குள்ளான 2 வாலிபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், வேல்முருகன் இவர்கள் இருவரும் சிற்பக் கலைக்கூடத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் மாமல்லபுரம் சிற்பக் கலைக்கூடத்தில் தங்களது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு ஒரே இருசக்கர வாகனத்தில் இருவரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மாமல்லபுரம் அரசு மருத்துவமனை அருகே வந்து கொண்டிருந்த சமயத்தில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி நின்று கொண்டிருந்த கார் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இரண்டு வாலிபர்களும் படுகாயமடைந்தனர்.
பின் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு எதிரே சுமார் மூன்றடி தூரத்தில் இருந்த மாமல்லபுர அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். தற்போது விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.