செய்தியாளர்கள் எங்களை முடக்கனும் என்கின்ற விதத்தில் தான் கேள்வி கேப்பீங்க. கிரிக்கெட்ல எதிர் டீம் சிக்ஸர் அடிக்கனும்னா பால் போடுவாங்க. அதை வந்து அவரு இப்பதானே அரசியலுக்கு வந்திருக்கிறார். கொஞ்ச நாள்ல பட்டு வருவாருள்ள, அதுல நிதானமாகிடுவாருன்னு நினைக்கின்றேன்.
ஏற்கனவே ஒருமுறை ஊடக நண்பர்களை பார்த்து பேசினாரு. ஒரு ஐபிஎஸ் அதிகாரி. அதுவும் ஒரு தேசிய கட்சியினுடைய தமிழ்நாட்டு தலைவர். அவருடைய இந்த மாதிரியா போக்கை அவர் கட்சியிலே உன்னிப்பா கவனிச்சுக்கிட்டு இருப்பாங்க. தேசிய தலைமைல கவனிக்கு. அவரு நிறைய விஷயங்கள் சரியாக, எடுத்து சொல்றாரு. ஆனால் இந்த மாதிரி கோவப்படுகிறார்.
நீங்க எந்த ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களையும், குறிப்பாக ஆளுங்கட்சி தலைவர்களை… நீங்கள் கேட்கிற கேள்வி, மக்களின் மனதில் உள்ளது தானே கேக்குறீங்க. எனவே பொறுமையா பதில் சொல்லணும் என தெரிவித்தார்.
ஏற்கனவே ஓபிஎஸ் – ஈபிஎஸ்ஸை யார் சேர்த்து வைத்தார்களோ, அவங்க மனசு வச்சா தான் அவங்க ரெண்டு பேரும் சேருவாங்க என்பது தான் என்னுடைய கருத்து.தேவர் ஜெயந்தியில் பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிச்சாமி போகாதது குறித்து பத்திரிகையாளர் கேள்வி கேட்டபோது, இதற்கு அண்ணன் ஜெயக்குமார். டி.ஜெ இருக்காரு இல்ல, அவர் கிட்ட கேளுங்க. அவர் என்ன சமாளிப்பு பண்றார்னு பாப்போம். நான் என் இன்னொரு கட்சியில் உள்ள அண்ணன் எடப்பாடி பற்றி பேசணும் என தெரிவித்தார்.