ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், என்னை பொறுத்த வரைக்கும் அம்மா கூட வந்ததுல இருந்து… 1982 ஆவது வருஷத்தில் இருந்து வந்ததுல இருந்து… ஆண்களுடைய ஆதிக்கம் ரொம்ப அதிகமா இருக்கும். எல்லா ஸ்டேட்லையும் இருக்கும். அதுல பெண்கள் வெளியே வருவது ரொம்ப ரொம்ப கஷ்டம். அந்த மாதிரி சமயத்துல நான் வந்து, அம்மா கூட இருந்து, வாழ்நாளில் நாங்க எந்த அளவுக்கு கஷ்டப்பட முடியுமோ, அந்த அளவுக்கு எல்லா கஷ்டமும் பாத்துட்டோம்.
அதெல்லாம் மீறி தான் நாங்க ஆட்சிக்கு வந்தோம். பெண்களுக்கெல்லாம் அம்மா செஞ்சாங்க. இதெல்லாம் நடந்துச்சு. நான் அறிக்கைகள் கொடுக்கும் போது கூட நீங்க கவனிங்க.. எதிர்க்கட்சிங்குறதுனால நான் திட்றது இல்ல. என் டைப்பே அப்படித்தான். நான் தீபாவிற்காகன்னு சொல்லல. எல்லாருக்குமே… நான் யாரையுமே திட்டறது இல்ல. அறிவுபூர்வமா விஷயங்களை எடுத்து சொல்வேன். உங்களுக்கு தெரியலன்னாப்பா தெரிஞ்சுக்கங்க. இதை செய்யுங்க.. அப்படிங்கறதைத்தான் நாங்க சொல்லி, நான் பழக்கப்பட்டு இருக்கேன்.
நான் நேரடியா அரசியல்ல அமைச்சராகவோ, ஏதுவாகவோ இல்லனா கூட… நாங்க 24 மணி நேரமும் மக்களுக்கு என்ன செஞ்சா நல்லா இருக்கும் ? எது அவுங்களுக்கு உதவியா இருக்கும் அப்படிங்கறத அம்மா கூட இருந்து நிறைய ஆலோசனைகள் சொல்லி இருக்கேன். அம்மாவும் நானும் உட்கார்ந்து நிறைய டிஸ்கஸ் பண்ண விஷயங்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்திருக்கிறோம். அதனால நான் யாரையுமே திட்டுவதை விட, அவங்கள திருத்தணும்னு தான் நான் பார்ப்பேன் என தெரிவித்தார்.