தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற அரசியல் விழாவில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கையை பிடித்து உயர்த்தி மோடி பாஜக அதிமுக கூட்டணியை மறைமுகமாக உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் மோடியால் கை உயர்த்தப்பட்ட டிரம்பின் கதி என்னவோ அதுதான் ஓபிஎஸ் இபிஎஸ்க்கும் ஏற்படும் என்று விமர்சனம் செய்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட்தேர்வு அடியோடு ரத்து செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.