சூர்யா சிவா மற்றும் டெய்சி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சூர்ய சிவா, தனிப்பட்ட இருவருக்கும் இடையேயான உரையாடல். அதுல வந்து எங்க மாநில தலைவர் சொன்ன மாதிரி, அது தனிப்பட்ட முறை இருந்தாலும் சரி, பொது தளத்தில் இருந்தாலும் சரி, கட்சி கண்டிப்பாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கும் என மாநில தலைவர் சொன்ன மாதிரி, ஒழுங்கு நடவடிக்கை குழுவை சந்திக்க சொன்னாங்க. அண்ணன் சபாபதி அவர்கள் தலைமை நடந்துச்சு.
நாங்க இருவருமே எங்களுடைய தரப்புல, என்ன சூழ்நிலையில் அந்த வாக்குவாதம் வந்தது. என்ன பேசுனோம் என்பதை இருவரும் எழுத்துப்பூர்வமாகவும் கொடுத்துள்ளோம், நேரிலும் விளக்கம் கொடுத்துள்ளோம். அக்கா தரப்பில் இருந்து நாங்க நல்ல பிரியத்தோடு தான் இருந்தோம். கட்சிக்கும் இதனால் நிறைய பிரச்சனை வருது.
அதனால எங்களோட பிரச்சினைகளை சுமூகமாக முடிச்சிக்கிறோம். எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்க என சொன்னோம். அக்கா தரப்பில் இருந்தும் அந்த ஆடியோ போல. இதன் நான் வெளில கொடுக்கல. இது வேற வழியில் வெளில போயிருந்தா ? அது யார் என்பதை கட்சி கண்டுபிடிக்கட்டும். இதை எங்களோடு சொல்லி கட்சிக்கு கெட்ட பெயர் வரணும் என்ற எண்ணம் இல்லை.
என்னிடமும் கேட்டபோது நான் என்னுடைய விளக்கத்தை கொடுத்து இருக்கிறேன். நான் கொடுத்திருக்கிற அறிக்கையிலும் கட்சி நான் பேசியது தவறு என்று சொல்லும் சூழலில், என் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுகின்றேன். மாநில தலைவருக்கு கட்டுப்படுகின்றேன் என்று அறிக்கையில் கொடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.