பிரான்ஸில் நடு ரோட்டில் நிர்வாணமாக நடந்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பிரான்சில் கடந்த 24 ஆம் தேதி பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் அருகில் ஒரு இளைஞர் நிர்வாணமாக ஓடியுள்ளார்.இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அந்த நபர் அங்கு இல்லை. இதுகுறித்து அந்த நபரை நேரில் கண்ட 22 வயதான கேத்தரின் என்பவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அந்த நபர் ப்ளூம்ஸ்பரி ஸ்கொயர் கார்டனை நோக்கி வேகமாக நடந்து சென்றார்.
அதன்பின் அவர் பிரிட்டிஷ் அருங்காட்சியை கடந்தபின் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்து விட்டு மீண்டும் நடந்து சென்றார் என்று கூறினார். மேலும் அவர் சென்றதைப் பார்த்த மற்றொரு நபரை ஏன் ஆடை இல்லாமல் செல்கிறாய் என்று கேட்டதற்கு அவர் தன்னை கழுவுவதற்காக ஆடைகளை கழற்றி விட்டதாக தெரிவித்துள்ளார். அந்த நபரின் பதில் மனநிலை பாதிக்கப்பட்டோரின் நடவடிக்கை போல இருந்தது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதனால் காவல்துறையினர் நிர்வாணமாக நடந்து சென்ற நபரை தேடி வருகின்றனர்.