Categories
அரசியல் மாநில செய்திகள்

அதான் நான் வந்துட்டேன்ல…. யாரையும் யாரும் விழுங்க முடியாது… சசிகலா அதிரடி பேட்டி ..!!

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை  இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு,  நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன்,  உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதிமுகவில் ஓபிஎஸ் , இபிஎஸ் தனித்தனியாக இருந்தாலும் கூட பாஜகவுடன் தான் கூட்டணி என்ற ஆதரவு நிலையில் இருப்பது தொடர்பான கோள்விக்கு,  எல்லாரையும் ஒன்று சேர்த்து,  எங்களுடைய கட்சி அமைப்புள்ள எல்லோரிடமும் டிஸ்கஸ் பண்ணி,  பெருவாரியான முடிவு எதுவோ அந்த முடிவு படி செயல்படுவோம். அதிமுக என்றாலே மகளிர் என இருந்த நிலையில், இப்போது அது மாறிவிட்டதா ? மகளிர் ஆதரவு அதிமுகவுக்கு குறைகின்றது என்ற கேள்விக்கு,

நான் வந்துட்டேன் எப்படி குறையும் ? நான் வந்துட்டா என எங்களுடைய மகளிரை மட்டும் சொல்லல நான்…  தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டில் உள்ள மகளிரையும் நான் சொல்றேன்.  எல்லாருக்கும் சொல்றேன். யாரையும் யாரும் விழுங்க முடியாது. அதெல்லாம் சும்மா வாய்க்கு சொல்லிட்டு போலாம். அந்த மாதிரி நிலைமை எல்லாம் கிடையாது என தெரிவித்தார்.

Categories

Tech |