Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“தாத்தா விளையாட கூப்பிடுகிறார்” முதியவரின் மூர்க்கத்தனமான செயல்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள தப்பளம்குண்டு பகுதியில் கூலித் தொழிலாளியான 60 வயதுடைய பாலு என்ற முதியவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். அதே பகுதியில் சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் பாலு அந்த சிறுமியை விளையாடுவதற்காக அழைத்துள்ளார். அப்போது அந்த சிறுமி தாத்தா விளையாட கூப்பிடுகின்றார் என்று அங்கே சென்றபோது பாலு சிறுமிக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சிறுமி அழுது கொண்டே நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பாலுவை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |