Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தட்டிக் கேட்டது ஒரு குத்தமா… நெசவுத் தொழிலாளியின் வேதனை… மாவட்ட கலெக்டரிடம் மனு…!!

தறி ராட்டையை  சேதப்படுத்திய  காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவு தொழிலாளி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார் .

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் எல்லத்துரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் நெசவுத் தொழில் செய்து வருகின்றார். இவர் வசிக்கும் வீட்டிற்கு அருகில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் ஒன்று அமைந்துள்ளது. அந்த நிலத்தில் குடிசை அமைப்பதற்காக அப்பகுதியில் வசிக்கும் சிலர் சென்றனர். அப்போது எல்லத்துரை இந்த இடத்தில் குடிசை அமைக்கக்கூடாது என்று தெரிவித்ததால் இவருக்கும் அங்கு வந்தவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின்படி அங்கு விரைந்து சென்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எல்லைத் துரையின் வீட்டிற்குள் சென்று தறி ஓட்டி கொண்டு இருந்ததை பார்த்து தறி மற்றும் ராட்டாயை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.இந்நிலையில் எல்லத்துரை மற்றும் அவரது மனைவி இருவரும் சேதப்படுத்திய தறி ராட்டையுடன் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது மாவட்ட அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தறி ராட்டையுடன் சென்ற தம்பதியை  நிறுத்தி விசாரித்துள்ளனர். இதனையடுத்து எல்லை துரை அங்கு நடந்த அனைத்து சம்பவங்களையும் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தால் தாங்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றோம் என மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் கொடுக்க வந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். அதற்கு காவல் துறையினர் ஊரடங்கினால்  திங்கள்கிழமை தோறும் நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை போடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் எல்லத்துரை மற்றும் அவரது மனைவி அவர்கள் கொண்டு சென்ற கோரிக்கை மனுவை அந்தப் பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்.

Categories

Tech |