Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் ஏற்பட்ட தட்டுப்பாடு…. களமிறக்கப்பட்ட ராணுவ வீரர்கள்…. வெளியான முக்கிய தகவல்….!!

இங்கிலாந்தில் பிரக்சிட்டையடுத்து ஏற்பட்ட பெட்ரோல் மற்றும் டீசலின் தட்டுப்பாட்டை போக்கும்படியான முக்கிய தகவலை அந்நாட்டின் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் பிரக்சிட்டையடுத்து கனரக வாகன ஓட்டுனர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் தொடர்ந்து உணவு உட்பட பல அத்தியாவசிய பொருட்களுக்கும் கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதோடு மட்டுமின்றி பெட்ரோல் மற்றும் டீசலின் விற்பனைக்கு கூட சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து நாட்டின் நிதி அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கிறிஸ்துமஸ் வரை கட்டாயமாக எரி பொருட்களின் விற்பனை சிக்கலாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பெட்ரோல் மற்றும் டீசலின் நெருக்கடியை போக்குவதற்காக சுமார் 200 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |